உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு

சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு உறுதியோடு இருங்கள் என ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு அளித்து உள்ளனர்.
உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு
Published on

சென்னை,

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.  இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். 

இந்தநிலையில், சமூகவலைதள பக்கத்தில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் அளித்து, நெருக்கடியான காலத்தில், என் மீது இரக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில், நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன்; சந்தர்ப்பவாதி; குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை; கருக்கலைப்பு செய்தேன் என்று என்னைப் பற்றிய வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து மீண்டு வர வெகு நாட்களாகும். இது ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில், என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை, ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றார்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு ரகுல் பிரீத் சிங் ஹார்ட் பதிவிட்டு உறுதியோடு இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சிமா மோகன் உறுதியோடு இருங்கள் சமந்தா என்று டுவிட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com