ராஜ் அய்​யப்பா நடிக்கும் “லவ் இங்க்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

மேக​ராஜ் தாஸ் இயக்கும் ‘லவ் இங்க்’ படத்தில் சுனில் ரெட்டி வில்​லனாக நடித்​துள்​ளார்.
ராஜ் அய்​யப்பா நடிக்கும் “லவ் இங்க்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on: 

‘லவ் இங்க்’ படம் வரும் டிசம்​பரில் வெளியாகவுள்​ளதாக இயக்​குநர் மேக​ராஜ் தாஸ் தெரிவித்துள்ளார்.

ராஜ் அய்​யப்பா, டெல்னா டேவிஸ் முதன்மை வேடங்​களில் நடிக்​கும் திரைப்​படம், ‘லவ் இங்க்’. இதில் ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்​டிமன்​றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். மேக​ராஜ் தாஸ் இயக்​கும் இப்​படத்தை எம்​ஆர் பிக்​சர்ஸ் ஏ.மகேந்​திரன் ஆதி​கேசவன் வழங்​கு​கிறார். தரண் குமார் இப்​படத்​துக்கு இசையமைத்துள்ளார்.

ஜோடிகள் டாட்டூ

இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் ‘லவ் இங்க்’. இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராஜ் அய்​யப்பா வலிமை, 100 படங்களில் நடித்துள்ளார். ‘உப்பு புளி காரம்’ ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. டெல்னா டேவிஸ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

இறுதிக்​கட்​டப் படப்​பி​டிப்பு

இயக்குநர் மேகராஜ் தாஸ் “இன்​றைய தலைமுறை​யின் சமகால உறவு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் இந்​தப் படம், நவீன காதலை நகைச்​சுவையுடன் சொல்​கிறது. இளைஞர்​களை மட்​டுமல்​லாமல், குடும்​பத்​துடன் ரசித்து, கொண்​டாடக்​கூடிய பட​மாகவும் இருக்​கும். பெரும்​பாலான படங்​களில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்​துள்ள சுனில் ரெட்டி இதில் வில்​லனாக நடித்​துள்​ளார். இறுதிக்​கட்​டப் படப்​பி​டிப்பு நடை​பெற்று வரு​கிறது. டிசம்​பரில் வெளியாகவுள்​ளது” என்​றார்.

X