'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டிய எஸ்.எஸ்.ராஜமவுலி...இயக்குனர் கொடுத்த ரியாக்சன்


Rajamouli recommends Tourist Family after a glowing review. Director reacts
x
தினத்தந்தி 20 May 2025 9:38 AM IST (Updated: 20 May 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டி இருந்தனர்.

சென்னை,

சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை 'பாகுபலி' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி இருக்கிறார்.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமலி'. ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் இப்படம் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

அந்தவகையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி இருந்தனர். இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், " டூரிஸ்ட் பேமிலி ஒரு அற்புதமான படம். ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்த் அற்புதமாக எழுதி இயக்கி இருக்கிறார். சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி. இப்படத்தை தவறவிடாதீர்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு ரியாக்ட் செய்து இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்த பதிவில், 'மிக்க நன்றி, எஸ்.எஸ்.ராஜமவுலி சார். உங்களின் வார்த்தைகள் உண்மையிலேயே இந்த நாளை இன்னும் சிறப்பானதாக்கியது. நன்றி கூற வார்த்தைகள் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story