முடிவுக்கு வந்த ராஜமவுலியின் “வாரணாசி” படத்தின் டைட்டில் பிரச்சினை

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
முடிவுக்கு வந்த ராஜமவுலியின் “வாரணாசி” படத்தின் டைட்டில் பிரச்சினை
Published on

பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் சர்ச்சை நீங்கியுள்ளது.

ரூ.1,400 கோடி பட்ஜெட் படம்

சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகும் ‘வாரணாசி’ படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும். கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது உருவாகிறது.

அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் ரகசியங்களும் இதன் மையக்கதை எனத் தெரிகிறது. ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைபனிப் பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் 'மகேஷ் பாபு' கதாநாயகனாக 'ருத்ரா' மற்றும் ‘ஸ்ரீராமர்' என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் 'கும்பா' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணியின் இசையமைப்பில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படம், 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘வாரணாசி’படத்தின் டைட்டிலை ஏற்​கெனவே பதிவு செய்து வைத்​திருப்​ப​தாகக் கூறி, தெலுங்கு திரைப்பட இயக்​குநர் சுப்பா ரெட்டி என்​பவர் புகார் கூறி​னார். இநத டைட்டிலை கடந்த 2023-ம் ஆண்டு பதிவு செய்​தோம் என்​றும் பின்​னர் கடந்த ஜூலை​யில் புதுப்​பித்​திருப்​ப​தாக​வும் கூறிய அவர், அதை எப்​படி அவர்​கள் பயன்​படுத்த முடி​யும்? என்று கேள்வி எழுப்பி இருந்​தார். இது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதனால், ராஜமவுலி இயக்​கும் படத்​துக்கு ‘ராஜமவுலி​யின் வாரணாசி’ என்று தலைப்பை மாற்​றிய​தாகத் தகவல் வெளி​யானது.

இந்நிலை​யில் இப்​பிரச்​சினைக்கு சுமுக தீர்வு ஏற்​பட்​டுள்​ளது. இயக்​குநர் சுப்பா ரெட்டி ‘வாரணாசி’ தலைப்​பின் உரிமையை ராஜமவுலி படக்​குழு​விடம் ஒப்​படைத்​துள்​ளார். இதுபற்றி சுப்பா ரெட்டி கூறும்​போது, “எனக்கு மிக​வும் பிடித்த நடிக​ரான மகேஷ் பாபு, இயக்​குந​ரான ராஜமவுலி ஆகியோரின் மிகப்​பெரிய திரைப்​படத்​துக்கு சிறிய அளவி​லா​வது நான் பங்​களிக்க முடிந்​ததில் பெரு​மை.ஒரு நல்ல படத்​துக்​காக இந்​தத் தலைப்பை வழங்​கு​வ​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

படத்தின் டைட்டில்காக எந்​த​வித பணப்​பரிவர்த்​தனை​யும் நடக்​க​வில்லை என்​றும் ராஜமவுலி மீதான மரி​யாதை​யின் அடிப்​படை​யிலேயே இந்த முடிவை எடுத்​த​தாக​வும் விளக்​கம்​ அளித்​துள்​ளார்​.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com