“தீ எரிந்தாலும் கவலை இல்லை”டுவிட்டரில் இருந்து விலகிய ரஜினி பட நடிகை

தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்சி சின்ஹா.
“தீ எரிந்தாலும் கவலை இல்லை”டுவிட்டரில் இருந்து விலகிய ரஜினி பட நடிகை
Published on

தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்சி சின்ஹா. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையால் ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

சினிமாவில் அரசியல் உள்ளது என்றும் வாரிசு நடிகர், நடிகைகள் மற்ற நடிகர்கள் வளர்வதை தடுக்கின்றனர் என்றும் கண்டித்து பதிவிடுகிறார்கள். நடிகை சோனாக்சி சின்ஹாவும் இந்த தாக்குதலில் சிக்கினார். அவரது சமூக வலைதள பக்கத்துக்கே சென்று சோனாக்சியை வசைபாடினர். நடிகை கங்கனா ரணாவத்தும் வாரிசு நடிகர்களால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று மறைமுகமாக சாடினார்.

இதற்கு பதில் அளித்த சோனாக்சி, மரணம் அடைந்த ஒருவரை வைத்து சிலர் விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர். உங்கள் எதிர்மறை கருத்துக்கள் தேவையற்றது என்றார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சோனாக்சி சின்ஹா தனது டுவிட்டர் கணக்கை முடக்கி விட்டு வெளியேறி விட்டார்.

மன நலனை பாதுகாக்க முதல் படி எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான். நான் எனது கணக்கை முடக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், தீ பற்றி எரியட்டும் எனக்கு கவலை இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com