ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Published on

சென்னை,

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர் இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்." என்று பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com