40 வயதில் திருமணம் செய்து கொள்ளப்போகும் ரஜினி பட நடிகை?

காதலனுடன் அவருக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
மும்பை,
விரைவில் பிரபல நடிகை ஒருவர் திருமண வாழ்க்கையை துவங்க போகிறார். சமீபத்தில், தனது காதலனுடன் அவருக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமல்ல , ரஜினிகாந்தின் காலா மற்றும் அஜித்தின் வலிமை படங்களில் நடித்த ஹுமா குரேஷிதான் . தெலுங்கு , இந்தி , மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இந்த நடிகை , நடிப்பு பயிற்சியாளர் ரச்சித் சிங்கைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது .
ஹுமா குரேஷியும் ரச்சித்தும் கடந்த ஆண்டு முதல் பல திரைப்பட நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர் . பாலிவுட் நடிகை சோனாக்சியின் திருமணத்திலும் அவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர் . சமீபத்தில் டொராண்டோ திரைப்பட விழாவிலும் அவர்கள் ஜோடியாக கலந்து கொண்டனர் . இருப்பினும், தங்கள் உறவைப் பற்றி அவர்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது , இவர்கள்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக இணையத்தில் பேச்சு எழுந்துள்ளது.
'கேங்க்ஸ் ஆப் வாஸேபூர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹுமா குரேஷி . பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இந்த நட்சத்திரம் , மலையாளத்தின் வெள்ளை, தமிழில் அஜித்தின் 'வலிமை' மற்றும் ரஜினிகாந்தின் 'காலா' படங்களிலும் நடித்துள்ளார் . ' மகாராணி' என்ற வெப் தொடரின் மூலம் நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றார் .
ரச்சித்தைப் பொறுத்தவரை , அவரது சொந்த ஊர் உத்தரபிரதேசம் . டெல்லியில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . பின்னர் 2016 இல், அவர் மும்பைக்கு வந்து நடிப்பு பயிற்சியாளராக ஆனார் .






