ஒரே பெயரில் வெவ்வேறு படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், தனுஷ்


Rajinikanth and Dhanush have acted in different films under the same name
x

தனுஷ் தற்போது நடித்துள்ள படம் ’குபேரா’.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாகிறது.

மறுபுறம், நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தில் அவர் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் தங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெவ்வேறு படங்களில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story