அரசியல் களத்தில் குதிக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு எவ்வளவு ?

அரசியல் களத்தில் குதிக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு எவ்வளவு ? என்பது குறித்து பின்ஆப் (finapp) வெளியிட்டு உள்ளது. #Rajinikanth
அரசியல் களத்தில் குதிக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு எவ்வளவு ?
Published on

ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்று கிழமை நான் அரசியலுக்குள் வருவது உறுதி!. என தெரிவித்தார். இந்த தகவல் வெளியானவுடன் , தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரவேற்பு தெரிவித்தனர்.

நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம், வருகிற சட்டமன்றதேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின்போது அந்தநேரத்தில் முடிவெடுப்பேன்.

உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான சாதி-மத சார்பற்ற ஒரு ஆன்மிக அரசியலை கொண்டுவரவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். முதலில் அனைத்து ரசிகர்களையும் ஒருங்கிணைத்து மன்றங்களை பதிவுசெய்ய வேண்டும். அதுதான் நமக்கு முக்கியமான முதல்வேலை. அதுவரையில் நான் உள்பட யாரும் அரசியல் பேசவேண்டாம். அரசியல்வாதிகளை திட்டவேண்டாம். அவர்களை விமர்சனம் செய்யவேண்டாம். குறைசொல்லவும் வேண்டாம். அறிக்கைவிடுவது, போராட்டம் நடத்துவதும் வேண்டாம் என்று பட்டவர்த்தனமாக கூறிவிட்டார்.

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் ரஜியின் அரசியல் வருகை அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையை பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வருகின்றனர், ரஜினி எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மேலேழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்த்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று பின்ஆப் வெளியிட்டுள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக பின்ஆப் தெரிவித்துள்ளது.

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்ற 3 ஆடம்பர கார்கள் மட்டுமே ரஜினியிடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி, ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி சென்னை போயஸ் தோட்ட வீட்டை 2002-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடி.

கடந்த 5 ஆண்டுகளின் ரஜினி வருவாய் மதிப்பு:

ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் ரஜினிகாந்த் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajinikanth #Superstar. #Rajinikanthpoliticalentry #finapp

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com