சாலையில் உணவு அருந்தும் ரஜினி.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ரஜினி தனது நண்பர்களுடன் சாலையோரக் கடையில் உணவு அருந்தினார்.
சாலையில் உணவு அருந்தும் ரஜினி.. வைரலாகும் புகைப்படங்கள்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் "கூலி" படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். கூலி படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார கால பயணமாக அவர் இமயமலை சென்றுள்ளார்.

இமயமலைக்கு சென்ற ரஜினி ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கினார். அதன் பின்னர் அவர் கர்ணபிரயாகைக்கு சென்றார். செல்லும் வழியில் அங்குள்ள சாலையோரக் கடையில், தனது நண்பர்களுடன் அவர் காலை உணவை அருந்தினார். அப்போது, எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் ரஜினி வேஷ்டி சட்டையில் எளிமையான தேற்றத்தில் உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com