

மும்பை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவரது தீவிர ரசிகர் ஒருவர் 230-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் உருவப் பொம்மைகளுடன் சிறப்பு நவராத்திரி கொலு அமைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர், மூன்று ஆண்டுகளாக நவராத்திரி விழாவின்போது, ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கொலு அமைப்பதை தொடர்ந்து வருகிறார்.
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில், அவரது ஆரம்பகாலப் படங்கள் முதல் அடுத்ததாக வெளியாகவுள்ள படங்கள் வரையிலான பல்வேறு தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
230-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் உருவப் பொம்மைகள் மூலம், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் இடம்பெற்ற முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் மீண்டும் திரையில் தோன்ற உள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற 15-ம் தேதி திரைக்கு வர உள்ளது.