'படையப்பா' பட தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்க சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

25 ஆண்டுகளை கடந்தும் படையப்பா படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தயாரிப்பாளருக்கு ரஜினி தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.
'படையப்பா' பட  தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்க சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்
Published on

சென்னை,

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் படையப்பா. 1999- ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினியின் சினிமா கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் படையப்பா இடம் பெற்றது.

படையப்பா வெளியாகி 25 ஆம் ஆண்டு நிறைவானதை கொண்டாடும் விதமாகவும் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதியில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த படம் ரீ ரிலிஸ் ஆனது. ரீ ரிலிசிலும் இந்த படம் சக்கை போடு போட்டது. 25 ஆண்டுகளை கடந்தும் திரையரங்குகளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், அப்போதே படையப்பா படத்தின் டைரக்டர், நடிகை ரம்யா கிருஷ்ணன், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில், படையப்பா பட தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு 5 சவரன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com