ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை நடிகர் ஆனந்தராஜ்

ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என ரஜினிகாந்தை சந்தித்தப் பிறகு நடிகர் ஆனந்தராஜ் கூறினார். #Bharathiraja #Rajinikanth
ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை நடிகர் ஆனந்தராஜ்
Published on

சென்னை,

ரஜினி நடித்துள்ள காலா படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. 2.0 படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எனவே இப்போது அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது கட்சி தொடங்கும் எண்ணம் ரஜினியிடம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்றாலும், மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. எனவே விரைவில் கட்சி தொடங்கு வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர் சமீபத்தில் போலீசாருக்கு ஆதரவாக ரஜினி கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனம் எழுந்தும் இதுவரை ரஜினி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. கட்சி பெயரை அறிவிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் நடை பெறவில்லை.

அரசியல் சூடுபிடித்துள்ள இந்த வேளையில் ரஜினி காந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு வார காலம் அமெரிக்காவில் ரஜினி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

இது பற்றி ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது, ரஜினி ஏற்கனவே அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக செல்கிறார். வேறு காரணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

ரஜினி அமைதியாக இருந் தாலும் கட்சி தொடங்கு வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து விட்டார். கட்சியின் அடிப்படையை பலப்படுத் தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சரியான நேரத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பார். சட்டமன்ற தேர்தலுக்கு நாள் இருக்கிறது. அதற்கு முன்பாக பெயரை அறிவித்து விட்டு மக்களை சந்திப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி

உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும்.

கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல்சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என கருதுகிறேன். இயக்குநர் பாரதிராஜா, ரஜினியை கர்நாடக தூதுவன் என கருத்து சொல்கிறார்; அப்படி என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார்.? ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்? கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com