ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போவதால் அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.