'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்

ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கும் இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்
Published on

சென்னை,

ரஜினிகாந்தை வைத்து சில படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், 'சாருகேசி'. இசையை மையமாக வைத்து, நம் கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் தயாராகிறது. இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுகாசினி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஓய்.ஜி.மகேந்திரன் நடத்திய புகழ்பெற்ற இசை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'சாருகேசி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 12ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் பங்கேற்று, படத்தின் டிரெய்லர் மற்றும் இசை தட்டை வெளியிட்டார். இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com