ரஜினிகாந்த் முதல் ரித்திகா சிங் வரை - 'வேட்டையன்' படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'வேட்டையன்' படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Rajinikanth to Ritika Singh - Do you know how much the actors got paid?
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. மேலும் இப்படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வண்டார்' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நட்சத்திரங்கள் வேட்டையன் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர்களான ரஜினிகாந்த் ரூ. 125 கோடியும், அமிதாப்பச்சன் ரூ. 7 கோடியும், பகத் பாசில் ரூ. 2-4 கோடி வரையும், ராணா டகுபதி ரூ. 5 கோடியும் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல், நடிகைகளான மஞ்சு வாரியர் ரூ. 2-3 வரையும், ரித்திகா சிங் ரூ.25 லட்சமும் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com