இந்திய அளவில் ட்ரெண்ட்டான ’ரஜினியின் எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு’

ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு என்ற ஹேஷ்டேக்கில் ரஜினியின் கருத்துகளை பதிவு செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். #Rajinikanthpoliticalentry #Rajinikanth
இந்திய அளவில் ட்ரெண்ட்டான ’ரஜினியின் எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு’
Published on

சென்னை

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் ரஜினி பற்றிய பல மீம்ஸ்களை அள்ளி தெளித்தவாறு உள்ளனர். அந்த வகையில் தற்போது - ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு; என்ற ஹேஷ்டேக்கில், ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசிய புகைப்படம் ஒன்றினை பதிவு செய்து தங்களது நக்கலான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களின் 20 ஆண்டு கால எதிர்பார்ப்பான அரசியல் பிரவேசத்தை கடந்த 31ஆம் தேதி அறிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது படையும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்போது பேசும் போது,

முந்தாநாள் ஒருவர் டக்கென்று மைக்கை நீட்டி சார் உங்கள் கொள்கைகள் என்ன? என்று கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு இரண்டு நிமிஷம் தலையே சுத்தி விட்டது. சோ சார் என்னிடம், இந்த மீடியா கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்று முதலிலேயே பயமுறுத்தி வைத்து இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது வருத்தம். இப்போது அவர் பக்கத்தில் இருந்து இருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்து இருக்கும். அவரது ஆத்மா எப்போதும் என் கூட இருக்கும். என கூறினார்.

இதனையடுத்து, ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர வலுத்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கட்சிப்பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். அதன்படி இணையதளத்தையும், டுவிட்டர் பக்கத்தையும் தொடங்கி தனது அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறார்

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ரஜினி கடந்த 31 ஆம் தேதி எடுத்த புகைப்பட காட்சி ஒன்றை பதிவிட்டு. ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு என்ற ஹேஷ்டேக்கில் அவரது கருத்துகளை பதிவு செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் ரஜினி தனது தலையில் கையை வைத்திருப்பது போன்று உள்ளது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இதுவரை பெரிதாக கேலி கிண்டல்களைப் பார்த்திராத ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் கண்டிப்பா இந்த ஹேஷ்டேக்கை பார்த்தா ஒரு நிமிடம் தலை சுத்திருக்கும்.

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு #Rajinikanthpoliticalentry #Rajinikanth

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com