புது பேரனுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த் - சமூக வலைதளங்களில் வைரல்...!

புது பேரனுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புது பேரனுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த் - சமூக வலைதளங்களில் வைரல்...!
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து,நேற்று எனது பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கடவுள் எனக்கு இந்த ஆண்டு என்னுடைய வீரா பாப்பாவை பரிசாக அளித்து வாழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த கடவுளின் குழந்தை (ரஜினிகாந்த்) எப்பொழுதும் என் பின்னால் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் போது அவருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com