ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ வெளியீடு

கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு நிகழ்வு வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டது.
ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் அவரது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது.

இதனை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com