ரஜினிகாந்த் பாராட்டு மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உள்ளது - எஸ்.ஜே.சூர்யா

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு தனக்கு மிகப்பெரிய கிடைத்தது போல் உள்ளது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பாராட்டு மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உள்ளது - எஸ்.ஜே.சூர்யா
Published on

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிய தர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. இரண்டு நாள்களுக்கு முன்பு நவம்பர் 25-ந்தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திரைப்பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மாநாடு திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உள்ளது என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று என்னுடைய நடிப்புக்கு மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உணருகிறேன். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து அழைப்பு வந்தது. 

சார், நீங்கள் என்னுடைய தசாப்தத்தை உருவாக்கினீர்கள். உங்களின் அன்பான பாராட்டு எனக்கு இந்தப் பயணத்தை எதிர்கொள்ள பெரும் பலத்தை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com