மூன்று நாட்களில்... ''லியோ''வின் அடுத்த சாதனையை முறியடித்த ''கூலி''

''கூலி'' படம் மூன்று நாட்களில் ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது.
Rajinikanth’s Coolie Breaks Leo’s Record, Becomes Fastest to Score Rs. 300 Cr Worldwide
Published on

சென்னை,

ரஜினிகாந்த நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கூலி' படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது. இந்த மைல்கல்லை (சுமார் ரூ. 324 கோடி வசூல்) கலவையான விமர்சனங்கள் மற்றும் 'வார் 2' போன்ற போட்டிகள் இருந்தபோதிலும் கூலி நிகழ்த்தி இருக்கிறது.

இந்தப் படம் மூன்று நாட்களில் இந்த வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, இந்த சாதனையை விஜய்யின் 'லியோ' வைத்திருந்தது. இது ஐந்து நாட்களில் அதை எட்டியது. இதன் மூலம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக லியோ படத்தின் முதல் நாள் வசூலையம்  கூலி படம் முந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூலியில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் ஷாஹிர், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com