25வது நாளில் வெற்றி நடைபோடும் ரஜினியின் “கூலி”

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் வரும் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
25வது நாளில் வெற்றி நடைபோடும் ரஜினியின் “கூலி”
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. அனிருத் இசையமைத்த இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. கூலி படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும், ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் கூலி அமைகிறது.

கூலி திரைப்படம் வரும் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் கூலி படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com