

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர்.
‘கூலி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, ‘பவர்ஹவுஸ்’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களுக்கு பலரும் ரீல்ஸ் வெளியிட்டு அசத்தினர். இப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து எதிர்வினைகளையே பெற்றது.
இந்த நிலையில், ‘பவர்ஹவுஸ்’ லிரிக்கல் வீடியோ யூடியூபில் 10 கோடிபார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதி பாடிய இப்பாடல் கடந்தாண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.