டிக்கெட் விற்பனையில் கோடிகளை அள்ளும் ரஜினியின் 'கூலி'


டிக்கெட் விற்பனையில் கோடிகளை அள்ளும் ரஜினியின் கூலி
x
தினத்தந்தி 25 July 2025 12:27 PM IST (Updated: 28 July 2025 1:10 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனல் பறக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தபடத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் திரைக்கு வர இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஓவர்சீஸ் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 181 இடங்களில் 438 காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதன் மதிப்பு ரு.2.5 கோடியை தண்டும் என்கிறார்கள். ரஜினியின் கூலி படத்துடன் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 படமும் மோதுகிறது. எனினும், ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனல் பறப்பதாக சொல்கிறார்கள்

விக்ரம், லியோ உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகாராஜின் இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்தில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் பான் இந்தியா அளவில் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

1 More update

Next Story