கேரளாவில் வெளியானது ரஜினிகாந்தின் “கூலி” - ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் ரசிகர்கள் திரையரங்குகளில் கூலி படத்தினை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கொச்சி,
நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான 171-வது படமான கூலி திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையிடப்படுகிறது. இந்த படத்தினை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர் கான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் உருவான இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரளாவில் கூலி படத்தின் முதல் காட்சி காலை 6.30 மணிக்கு வெளியாகி உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் திரையரங்குகளில் கூலி படத்தினை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.






