ரசிகர்களை பார்த்ததும் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்

`வேட்டையன்' படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
ரசிகர்களை பார்த்ததும் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்
Published on

ஐதராபாத்,

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் டிவி பிரபலம் விஜே ரக்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், `வேட்டையன்' படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்போது தனது ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com