

சென்னை,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் மொத்தம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் கால அளவு கொண்டதாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.