ரஜினியின் அடுத்த 5 வருட திட்டம்.. ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்த தகவல்

கல்லூரி ஒன்றில் பேசிய கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பேச்சு வைரல் ஆகியுள்ளது.
ரஜினியின் அடுத்த 5 வருட திட்டம்.. ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்த தகவல்
Published on

சென்னை,

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தை இயக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. பட வேலைகளுக்கு மத்தியில் கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்.ஜே பாலாஜி அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், கல்லூரி ஒன்றில் பேசிய ஆர்.ஜே பாலாஜி , ரஜினிகாந்த் பற்றிய பேச்சு வைரல் ஆகியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி கூறியதாவது, என்னிடம் இப்போது சில இளைஞர்கள் 22, 23 வயதில் உதவி இயக்குனர்களாக, எழுத்தாளர்களாக வருகிறார்கள். மூன்று மாதம் நன்றாக பணியாற்றி விட்டு பின்னர் சோர்வாக இருக்கிறது, பிரேக் வேண்டும் என்கிறார்கள்.

என் மகன்கள் கூட 'ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க' என்று சொல்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் முன் சூப்பர்ஸ்டார் ரஜினி சாரை சந்தித்த போது அடுத்த ஐந்து வருடங்களுக்கு, என்ன படங்கள் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எந்த இயக்குனர்களிடம் பேசி இருக்கிறார் என்ற தனது திட்டங்களை கூறினார். 75 வயது மனிதர் அடுத்த ஐந்து வருடங்களுக்கான திட்டத்தை வைத்திருக்கிறார். எனவே இளம் தலைமுறையினர், ஸ்ட்ரெஸ் என்பதை எல்லாம் தூக்கி ஓரமாக வையுங்கள். 50 வருடமாக சினிமாவில் இருக்கும் ஒரு நபரால் இன்னும் அதே ஆர்வத்துடன் பணியாற்ற முடிகிறது என்றால், உங்களாலும் முடியும், என்னாலும் முடியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com