இமயமலை சென்ற ரஜினியின் வைரலாகும் புகைப்படம்


இமயமலை சென்ற ரஜினியின் வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 5 Oct 2025 3:22 AM IST (Updated: 6 Oct 2025 11:40 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் ஒருவார கால பயணமாக இமயமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஒருவார கால பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினி இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். இந்த முறை கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததன் காரணமாக செல்லவில்லை.

1 More update

Next Story