

சென்னை,
கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். அதனால் ‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ‘தலைவர் 173’ படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அஷ்வத் மாரிமுத்து ‘ஓ மை கடவுளே’,‘டிராகன்’ என இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.