ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு
Published on

ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர்.

கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யூடியூப்பில் டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 3D-ல் டீசர் வெளியிடப்பட்டது. சுமார் 1 நிமிடம் 30 நொடிகள் ஓடும் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக துவங்கியது. டீசர் வெளியிட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com