ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் : ‘நாளைய முதல்வரே’ ’ஈரத்ழமிழனே’ ’ஆளப்பிறந்தவரே’

ரஜினி பிறந்தநாள் ‘நாளைய முதல்வரே’ ’ஈரத்ழமிழனே’ ’ஆளப்பிறந்தவரே’ ரசிகர்கள் ஒட்டிய சுவாரஸ்யமான போஸ்டர்கள்.
ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் : ‘நாளைய முதல்வரே’ ’ஈரத்ழமிழனே’ ’ஆளப்பிறந்தவரே’
Published on

சென்னை

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் எப்போதும் போஸ்டர்கள் மூலமாக ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து விதம்விதமான போஸ்டர்களை ஒட்டுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அது போன்று ஒட்டப்படும் போஸ்டர்களில் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ஆர்ப்பரிக்கும் வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்களான காமராஜர், அண்ணா ஆகியோரின் போட்டோக்களுடன் ரஜினியை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் 3வது கருப்பு தமிழன் ஆளட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய முதல்வரே!, ஈகை மனம் கொண்ட ஈரத்ழமிழனே!, அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கிறோம். வா... தலைவா.... வா என்றும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மாண்புமிகு ரஜினிகாந்த் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்கும் விழா என்றும் ,ஆளப்பிறந்தவரே,மக்கள் போற்றும் மாமனிதரே, மக்களின் உயிரே, ரஜினி காந்த் எனும் நான்... என்று தொடங்கும் வாசகங்களும் இடம் பெற்ற போஸ்டர்கள் ஒட்டபட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com