'சர்தார் 2 ' படத்தில் இணைந்த நடிகை ரஜிஷா விஜயன்

‘சர்தார் 2 ’ படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
'சர்தார் 2 ' படத்தில் இணைந்த நடிகை ரஜிஷா விஜயன்
Published on: 

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிகா ரங்கநாத் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'மிஸ் யூ' படத்திலும், சிரஞ்சீவி, திரிஷா நடித்து வரும் விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

View this post on Instagram

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com