கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சும், சோனி பிக்சர்சும் இணைந்து ஒரு புதிய படம் தயாரிக்கின்றன. இது, ராஜ்கமல் பிலிம்சுக்கு 51-வது படம்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம்
Published on

ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

படத்தைப் பற்றி கமல்ஹாசன் கூறும்போது, ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்சுடன் இணைந்து படம் தயாரிப்பதை பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

கமல்ஹாசன் சர்வதேச திரையுலகில், தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்பவர். அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெருமையாகவும்,

மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com