கீர்த்தி சுரேஷின் “ரஃப்​தார்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

ஆதித்யா நிம்​பல்​கர் இயக்கத்தில் ராஜ்கு​மார் ராவ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஃப்​தார்’ படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷின் “ரஃப்​தார்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
Published on

கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இது ‘தெறி’ படத்​தின் ரீமேக்​காகும். அட்லி தயாரித்த இந்​தப் படம் பெரிய வரவேற்பை பெற​வில்​லை. நடிகை கீர்த்தி தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் நடித்து வருகிறார்,

இதையடுத்து அவர் நடித்​துள்ள மற்​றொரு இந்தி படத்​துக்​கு, ‘ரஃப்​தார்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ராஜ்கு​மார் ராவ் ஹீரோவாக நடித்​துள்ள இப்​படத்​தில் அனு​ராக் தாக்​கூர், ரோஹன் வர்​மா, தான்யா மணிக்​தலா, ரஜத் கபூர் உள்​ளிட்ட பலர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

அமே​சான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்​படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்​கி​யுள்​ளார். ராஜ்கு​மார் ராவின் மனை​வி​யும் நடிகை​யு​மான பத்​ரலே​கா, தனது காம்பா பிலிம் மூலம் இப்படத்தைத் தயாரித்​துள்​ளார்.

“வேக​மாக வளரும் ஒரு ‘ஸ்​டார்ட்​-அப்’ நிறு​வனத்​தை​யும், லட்​சிய வெறி கொண்ட ஒரு ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் இடையி​லான உணர்ச்​சிகர​மான உறவை​யும் மையப்​படுத்​திய கதை இது. பணம், அதி​காரம், பேராசை ஆகியவை பெரு​கும்​போது, வெற்றி பெற வேண்​டும் என்ற அவர்​களது தாகம் காதலோடு மோதத் தொடங்​கு​கிறது. பிறகு என்ன நடக்​கிறது என்று படம் செல்​லும். இந்​தி​யா​வின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாக​வும் அறிவை விதைக்க வேண்​டிய கல்வி எப்​படி வணிக மயமானது என்பதையும் இப்​படம் பேசும்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

இந்நிலையில், ஜூலை 24-ல் வெளி​யாக இருந்த ‘ரஃப்​தார்’ படம் அக்டோபர் 16-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com