வாமிகா கபி நடிக்கும் அடுத்த பாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு


Rajkummar Rao, Wamiqa Gabbi to star in Bhool Chuk Maaf
x

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

மும்பை,

பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, 'து மேரா 22 மெயின் தேரா 22' படத்தில் யோ யோ ஹனி சிங் மற்றும் அமரீந்தர் கில் ஆகியோருடன் சேர்ந்து நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.

தொடர்ந்து, 'இஷ்க் பிராண்டி' , 'நிக்கா ஜைல்டார் 2' , 'பராஹுனா', 'தில் தியான் கல்லன்' , 'நிக்கோ ஜைல்டார் 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த 'பேபி ஜான்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'பூல் சுக் மாப்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதனை மடாக் பிலிம்ஸ் தயாரிக்க கரண் ஷர்மா எழுதி இயக்குகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story