ஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் பெயர் மாற்றம்

ஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் பெயர் மாற்றம்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஜோதிகா 1998-ல் 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் ஜோதிகா தற்போது 'ஸ்ரீ' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

பிரபலமான பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகி உள்ளது. தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இப்படம் மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 'ஸ்ரீகாந்த்' என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com