’அந்த படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றால், அரை நிர்வாணமாக ஓடுவேன்’ - இயக்குனர் அதிர்ச்சி கருத்து


Raju Weds Rambai: Director’s comments go viral
x

இயக்குனர் சாய்லுவின் சமீபத்திய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

சென்னை,

’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ என்ற படத்தை சாய்லு இயக்கி உள்ளார். இப்படத்தில் அகில் உத்தேமரி மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இடிவி வின் ஒரிஜினல்ஸ், டோலாமுகி சபால்டர்ன் பிலிம்ஸ் மற்றும் மான்சூன் டேல்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு உடுகுலா மற்றும் ராகுல் மோபிதேவி தயாரித்திருக்கின்றனர்.

தான் காதலிக்கும் பையனுக்கும் தனது குடும்பத்திற்கும் இடையில் சிக்கித் தலிக்கும் ஒரு பெண்ணின் கதை. இந்தப் படம் இன்று வெளியாகிறது.

இந்நிலையில், இயக்குனர் சாய்லுவின் சமீபத்திய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ’அதிகாலை காட்சிகளுக்குப் பிறகு படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றால், ஐதராபாத்தின் அமீர்பேட்டை எக்ஸ்-ரோடுகளில் அரைநிர்வாணமான ஓடுவேன்" என்று அவர் கூறினார். அவரது இந்த கருத்து வைரலாகியுள்ளது

1 More update

Next Story