யாருக்கு யூடியூப்...! பிரபல நடன இயக்குனரின் 3 வது மனைவி மீது தாக்குதல்...!

ராகேஷ் மாஸ்டரின் மூன்றாவது மனைவி லடசுமி ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.
யாருக்கு யூடியூப்...! பிரபல நடன இயக்குனரின் 3 வது மனைவி மீது தாக்குதல்...!
Published on

ஐதராபாத்

தெலுங்கு சினிமா உலகின் பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் (53) இவர் சமீபத்தில் மரணமடைந்தார்.

ராகேஷ் மாஸ்டரின் மூன்றாவது மனைவி லடசுமி ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது லல்லி என்ற யூடியூபர் நான்கு பெண்களுடன் வந்து அவரைத் தாக்கியுள்ளார். அவர்கள் அவரது தலைமுடியைப் பிடித்து சாலையோரத்தில் கண்மூடித்தனமாக அடித்தனர்.

அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து லட்சுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். லட்சுமி தாக்கிய பெண்கள் மீது பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

சிறிது நேரம் கழித்து லல்லி நான்கு பெண்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து லட்சுமி மீது புகார் அளித்தார். இருவரின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இருவரையும் அனுப்பி வைத்தனர்.

லட்சுமியுடன் சேர்ந்து அனைவரும் யூடியூப் சேனல்களையும் நடத்துகிறார்கள். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ராகேஷ் மாஸ்டருக்கு சமையல் செய்து கொடுக்க வந்த லட்சுமி அவரது மனைவியானார். ராகேஷ் மாஸ்டர் ஏற்கனவே யூடியூப் சேனல் வைத்திருந்தார். அவருக்கு அதிக பின்தொடர்பவர்களும் இருந்தனர்.

ராகேஷ் மாஸ்டருக்கும் லக்ஷ்மிக்கும் சண்டை வந்ததால் அவர் வேறு வீட்டிற்கு மாறினார். அப்போது, ராகேஷ் மாஸ்டரின் யூடியூப் சேனலை லட்சுமி கைப்பற்றியதாகவும், தற்போது அவரது குடும்பத்தினர் அதை எடுக்க முயல்வதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com