ராக்கி சாவந்தின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது...? போலீஸ் நிலையம் முன் மயக்கம் அடைந்தார்

என் கணவருக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் எனது நகை, பணத்தை திருடிவிட்டார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன்.
ராக்கி சாவந்தின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது...? போலீஸ் நிலையம் முன் மயக்கம் அடைந்தார்
Published on

மும்பை

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவர் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார். இதேபோல தன்னுடைய முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தேரியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மாயமாகி இருந்ததை ராக்கி சாவந்த் பார்த்தார். கட்டிட காவலாளி மூலம் கணவர் அதில் துரானி வீட்டுக்கு வந்து சென்றதையும் அவர் தெரிந்து கொண்டார். எனவே அவர் கணவர் மீது மீண்டும் நேற்று முன்தினம் ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று போலீசார் புகார் தொடர்பாக அதில் துரானியிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ஒஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-

என் கணவருக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் எனது நகை, பணத்தை திருடிவிட்டார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன். இனி அவருடன் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

எப்போதும் வைரல் செய்திகளில் இருக்கும் ராக்கி சாவந்த், வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காலையில் ஒன்றும், இரவில் இன்னொன்றும் பேசும் ராக்கியை எப்படி நம்புவது என்று அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ராக்கியின் தாய் இறந்து விட்டார். இந்த கடினமான நேரத்தில் அவரது கணவர் அதில் கான் துரானி அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் இப்போது சில நாட்களில் ராக்கி அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த வழக்கு தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. அதில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராக்கி திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com