"போச்சுடா" ; நான் 'அதிக மூடிய' ஆடைகளையே அணிய வேண்டும் என என் காதலன் விரும்புகிறார்- ராக்கி சாவந்த்

புதிய காதலன் ஆதில் கான் துரானி தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
"போச்சுடா" ; நான் 'அதிக மூடிய' ஆடைகளையே அணிய வேண்டும் என என் காதலன் விரும்புகிறார்- ராக்கி சாவந்த்
Published on

மும்பை

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார்.

ஆதிலின் குடும்பம் நான் கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார்.

இந்த நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் அடில் துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன்.

ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது குடும்பத்தினருடன் என்னை அறிமுக படுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில 'எதிர்ப்பு' இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார்.

வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் அடில் தன் மீது விதிக்கவில்லை.'ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com