"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" இந்தியன் 2வில் கமல்ஹாசனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ரகுல் பிரீத் சிங்

இந்தியன் 2வில் கமல்ஹாசனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ரகுல் பிரீத் சிங் 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என கூறி உள்ளார்.
Published on

திருப்பதி

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பதி சுற்றுவட்டாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அதிகாரிகளிடம் 'இந்தியன் 2' பட யூனிட் அனுமதி பெற்று உள்ளது.

திருப்பதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி பகுதியில் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங் இடையேயான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் சித்தார்த் கூட்டணியில் ஒரு காட்சியும் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியன் 2 படத்தை உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுபாகரன் தயாரித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்திலும் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்தியன் படத்தைப் போலவே ஊழலுக்கு எதிராகப் போராடும் பழைய சுதந்திரப் போராட்ட வீரராக கமல் நடிக்கவுள்ளார்.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், ரகுல் பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். மேலும், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகை ரகு பிரீத் சிங் இந்திய சினிமா கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பவான்களுக்கு சொந்தமானது என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

"கமல்ஹாசனுடன் நடிப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. கமல்ஹாசன் சார் ஒரு . பலகலைக்கழகம் மேலும், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

"உங்களுக்குத் தெரியும், கமல் சார், அமிதாப்பச்சன் ஜி இந்திய சினிமா அவர்களுக்கு சொந்தமானது. 100 வருட இந்திய சினிமாவில், அவர்கள் இவ்வளவு காலமாக இருக்கிறார்கள்.60 வருடங்கள் என்று நான் நினைக்கிறேன். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com