இந்தி நடிகரை காதலிக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங்

தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங், என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார்.
இந்தி நடிகரை காதலிக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங்
Published on

என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். நேற்று ரகுல் பிரீத் சிங் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக ரகுல்பிரீத்சிங் அறிவித்தார்.

காதலருடன் கைகோர்த்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ரகுல்பிரீத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், அன்பானவரே நன்றி. இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கிய உங்களுக்கு நன்றி. இடைவிடாமல் என்னை சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. ஒன்றாக சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவோம்'' என்று கூறியுள்ளார். ஜாக்கி பாக்னானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், நீ இல்லாமல் நாட்கள் நாட்களாக இல்லை. நீ இல்லாமல் சுவையான உணவை சாப்பிடவும் பிடிக்கவில்லை. என் உலகமாக இருக்கும் அழகான ஆன்மாவுக்கு வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார். இருவருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com