திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் கலக்கும் ரகுல்பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Rakul Preet Singhis hot even after marriage
Published on

சென்னை,

தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங், அதனைத்தொடர்ந்து 'தேவ்', 'என்.ஜி.கே.', 'அயலான்' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்தில் நடித்துள்ளார்.

ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடந்தது.

நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா, நிக்கி கல்ராணி வரிசையில் திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடிக்க ரகுல் பிரீத் சிங் முடிவு செய்துள்ளார். குறிப்பாக இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்த அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

இதற்காக அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங்கின் அழகை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தற்போது 'மேரி பத்னி கா', 'டி டி பியார் டி-2' ஆகிய இந்தி படங்களில் நடித்து கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங், தமிழ் சினிமாவில் நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறாராம். சினிமா தாண்டி ஓட்டல் தொழிலில் ஈடுபடவும் ரகுல் பிரீத் சிங் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com