ஐதராபாத்தில் உணவகம் தொடங்கும் பிரபல நடிகை

நடிகைகள் பலரும் சினிமாவை தாண்டி புதிய தொழில்கள் தொடங்கி வருகிறார்கள்.
image courtecy:instagram@rakulpreet
image courtecy:instagram@rakulpreet
Published on

சென்னை,

பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல்பிரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று,தேவ், என்.ஜி.கே. அயலான் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில், இவருக்கு திருமணம் நடந்தது.

நடிகைகள் பலரும் சினிமாவை தாண்டி புதிய தொழில்கள் தொடங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் ரகுல் பிரீத் சிங் உணவகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி, ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் உணவகம் ஒன்றை கட்டியுள்ளார். இதனை நாளை திறக்கிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, "ஐதராபாத்தில் எனது முதல் உணவகத்தை திறப்பது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கும் சத்தான, சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உணவகத்தை திறக்கிறோம்.

இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்'' என்றார். உணவகம் தொடங்கும் ரகுல் பிரீத் சிங்குக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com