“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜெயவேல் இயக்கத்தில் பூவையார் நடித்துள்ள "ராம் அப்துல்லா ஆண்டனி" படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
Published on

சென்னை,

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் "பிகில்" படத்தில் 'வெறித்தனம்' பாடலில் நடனமாடி அறிமுகமானார். அதனை தொடர்ந்து "மாஸ்டர், மகாராஜா, அந்தகன்" போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பூவையார், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள "ராம் அப்துல்லா ஆண்டனி" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இப்படம் தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் "ராம் அப்துல்லா ஆண்டனி" படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com