

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகை சுருதி ஹாசன் சிறப்பு நடனமாடியுள்ள பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ‘ஹெல்லல்லோ’ பாடல் நாளை (மே 23) வெளியாகவிருக்கிறது. தமிழில் இந்தப் பாடலுக்கு சிநேகன் பாடல் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடனமாட, நடிகை சுருதி ஹாசன் சுமார் ரூ.3 கோடி வாங்கியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.