வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்


வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்
x
தினத்தந்தி 19 Sept 2025 6:49 PM IST (Updated: 19 Sept 2025 7:13 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான விளம்பர தூதராக நடிகர் ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பவர் ராம் சரண். இவர் தற்போது பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

உலகத்திலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளை ஏபிஎல் (ஆர்ச்சரி பிரீமியர் லீக்) என்ற பெயரில் இந்தியாவின் வில்வித்தைக்கான அமைப்பு நடத்துகிறது. இந்தப் போட்டியில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் 36 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். ஓர் அணிக்கு 8 பேராக (4 ஆண்கள் 4, பெண்கள்), மொத்தம் 48 பேர் விளையாடுகிறார்கள். இந்தப் போட்டிகள் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வில்வித்தை லீக் போட்டியை நேரலையாக துர்தர்ஷன் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.

விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ராம் சரண் “என்னை ஏபிஎல் தொடரின் விளம்பர தூதராக நியமித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி நமது நாட்டின் பழமையான, வலிமையான விளையாட்டிற்கான அற்பணிக்காக இருக்கிறது. வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமையைப் பிரதிபலிக்கிறது. இதன் மதிப்புகள் களத்திலும் வெளியேவும் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு இந்தத் தொடர் உத்வேகம் அளிக்குமென நம்புகிறேன். வில்லை எடுத்து, நோக்கத்தோடு எய்துங்கள், சிறப்பை அடையுங்கள்” என்றார்.

1 More update

Next Story