'அனிமல்' இயக்குனருடன் இணையும் ராம் சரண்?


Ram Charan teaming up with Sandeep Reddy Vanga for an interesting project
x

ராம் சரண் தற்போது ’பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது

இந்நிலையில், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு டெவில் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் அனிமல் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.

அடுத்தது பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' படத்தை இவர் இயக்க இருக்கிறார். இதற்கிடையில், இவர் ராம் சரணை இயக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story