ராம் சரணின் 'பெத்தி': சிவ ராஜ்குமாரின் அசத்தலான பர்ஸ்ட் லுக் வெளியீடு...


Ram Charan’s Peddi: Shiva Rajkumar’s stunning first look unveiled
x
தினத்தந்தி 12 July 2025 4:30 PM IST (Updated: 1 Sept 2025 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சென்னை,

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பிறகு ராம் சரண் ''பெத்தி'' படத்தில் நடித்து வருகிறார். காதல் படமான உப்பெனாவின் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரலாகியது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சிவ ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அவரது அசத்தலான பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

1 More update

Next Story